Jai Bhim, Voice of voiceless

Public reactions on Jai Bhim

திரு ஞானவேல் இயக்கத்தில், ஜோதிகா-சூர்யா தயாரிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம். இதில் சூர்யா வழக்கறிஞராகவும், மணிகண்டன், லிஜோமோன் ஜோஸ், மொச குட்டி மற்றும் அல்லி கொடி ஆகியோர் மலைவாழ் கிராம மக்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய கதை களம் அந்த மலைவாழ் மக்களுக்கு நிகழும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் மையமாக கொண்டது. இந்த கதை 1995 ஆம் ஆண்டு இருளர் இனத்தை சார்ந்த குடும்பத்திற்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்தினை தாங்கி நிற்கிறது.

கோணமலை கிராமத்தில் சில இருளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அவர்கள் அன்றாட உணவிற்காக எலி, முயல் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடி அல்லது அன்று கிடைக்கும் கூலியினை வைத்து உண்டு வாழ்கிறார்கள்.அதே கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிலவுடைமையாளர் ஒருவர் வீட்டில் நகை களவு போனதும், அவர்கள் இருளர் இனத்தை சார்ந்த ராஜ்கண்ணன்,அவரது மனைவி, சகோதரர் மற்றும் சில உறவுகளையும் கைது செய்தது போலீஸ்.

காவல் நிலையத்தில் வைத்து அவர்களை மிகவும் கொடுமையான முறையில் விசாரணை செய்கிறது காவல்துறை. ராஜகண்ணனின் மனைவி செங்கேணி வழக்கறிஞர் திரு.சந்துரு அவர்களின் உதவியால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை செய்கிறார். இந்த வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படுகிறது, எந்த விதமான இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை.

Rajakannan and Alli
ராஜ்கண்ணன் மற்றும் அல்லி

சம்பவம் நடந்த அந்த குறிப்பிட்ட கலாட்டத்தில் திரு.சந்துரு வழக்கறிஞர். இவர்தான் பார்வதியின் வழக்கை ஏற்று நடத்தினர். ஜெய் பீம் வெளியான பிறகு பல முன்னணி ஊடகங்கள் அவரை பேட்டி காண்கிறார்கள். அதில் அவர் கூறியதாவது, படத்தில் காட்டப்படும் துன்புறுத்தல்கள் ஒரு சிறு பகுதிதான் என்றும், சிலவற்றை காட்சி படுத்தக்கூட முடியாத அளவிற்கு மிகவும் கொடுமையானதாக இருந்தது என்றும் கூறினார். காவல் துறையினர் பாரவ்திக்கும், வழக்கறிஞர் ஆகிய எனக்கும் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறினார்.தனது நேர்மைக்காகவும், நீதியினை நிலைநாட்டியதற்காகவும் பின்னாளில் அவர் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியை பொறுப்பேற்றார்.

Hon. Justice Mr.Chandru
Justice Mr. Chandru

இவ்வாறு பார்ப்பவர்கள் கண்கள் குளமாகும் அளவிற்க்கு வழிகளை காட்டும் இந்த திரைப்படத்தினை சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்துள்ளனர். பரட்வஜ் ரங்கன் போன்றவர்களும், சாதி பித்து பிடித்தவர்களும் இந்த படம் தேவையில்லாத காட்சிகளை கொடுள்ளது என்று கூறுகின்றனர். தாயினை கைது செய்த போது மகள் அல்லி அழுவதும், காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்படுவதும் அதிகப்படுத்த பட்டுள்ளதாம்!!!

இந்த படத்தில் நடித்துள்ள மணிகண்டன், மொச குட்டி மற்றும் இருட்டப்பன் போன்றவர்கள் கூறுவதை கேட்கும் போதே தெரிகிறது அவர்களின் வாழ்வியல் மிகவும் கடினமது என்று. இருட்டப்பன் தன வாழ்நாளில் முதல் முறையாக ௩ முறை உணவு உண்டதாக கூறினார். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இந்த வலியினை கொண்டுள்ளது என்றால், நிஜத்தில் ராஜாக்கண்ணு மற்றும் அவர் குடும்பத்தினர் எவ்வளவு வழிகளை கொண்டு இருப்பார்கள்.

Speak in Tamil-slap for Hindi
Tamil vs Hindi

இது ஒரு புறம் இருக்க, சமூக வலைத்தளத்தில் ஒரு சண்டை நடக்கிறது. நீதி மன்ற உத்தரவின்படி விசாரனை அதிகாரியாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ், நகை அடகுக்கடை வைத்து இருப்பவரை விசாரிக்கும்போது அவர் ஹிந்தியில் பேசுவார், அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் சொல்லுமாறு காட்சி வரும். இதற்கு ஹிந்தி திணிப்பர்வர்களும் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பை கொடுக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். இது காட்சியாக இருந்தாலும் ஹிந்தி திணிப்பிற்கான நம் எதிர்ப்பை காட்டுவது மிகவும் அவசியம்.

Alli Kodi
Alli kutty

அதே வேளையில் அல்லியாக நடித்த குழந்தையினை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளதாக தகவல் வேகமாக பரவியது. இதனையடுத்து நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு அதனை சரி செய்துள்ளதாக தெரிகிறது. Behindswood நிறுவனம் அந்த குழந்தையின் பெற்றோரை தொடர்புகொண்டு கேட்டபோது இந்த வதந்தி என்றும், பள்ளி அவர்க்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply