Tamil-zomato

தமிழ் கற்றுகொள்ளுங்கள்

தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் கற்று கொடுக்கப்படும்.

தமிழகம் மற்றும் நாடு முழுவதும் தற்போது பெரும் பேசுபொருளாகவும் விவாதத்திற்கும் உள்ளன Zomato விவகாரம். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒன்றிய அரசுக்கு நம் தமிழ் உணர்வையும் ஹிந்தி எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறோம். இதற்கான போராட்டங்கள் ஏராளமானவை மற்றும் ஆணித்தரமானது. இங்கு மொழி போர் நடத்தப்பட்டுள்ளது, பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒன்றிய அரசாங்கம் அனைத்து காலத்திலும் ஏதோ ஒரு வழியில் ஹிந்தி திணிப்பை செய்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் திமுக MP திருமதி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதே போன்று கூறியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவன ஊழியர் ஒருவர், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் அதனை அனைவரும் குறைந்த அளவிலாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த ஊழியருக்கு ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே என்றும் இந்தியாவிற்கு என்று தனி தேசிய மொழி இல்லை என்றும் அவருக்கு தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தமிழ் சிறப்பு மிக்கது. ஹிந்தி திணிப்பு என்பது ஒரு அரசியல் நாடகமே தவிர, அறிவு சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் ஒரு நிறுவனத்தையோ அல்லது நிறுவனத்தின் பொருளையோ விளம்பரப்படுத்தவும் விற்கவும், நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்களின் மொழிகளில் மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை தமிழில் மட்டுமே விளம்பரம் செய்யப்படுகிறது. ஏன் அவர்களால் மற்ற மொழிகளில் குறிப்பாக ஹிந்தியில் செய்ய முடியவில்லை.

ஒன்றிய அரசு அனைத்து விளம்பரங்களும் ஹிந்தியில் மட்டும் தன செய்ய வேண்டுமென்றும், தமிழகத்தில் ஓட்டு கேட்கும் போதும் ஹிந்தியில் மட்டும் தான் கேட்கவேண்டும் என்று சொல்ல முடியுமா?. பெரு நிறுவனர்கள் வணிகம் செய்ய மட்டும் தமிழ் தேவைபடுகிறது. ஆனால் தமிழில் படிக்கவும், அலுவலகங்களில் பயன்படுத்தவும், பொதுவெளியில் பேசவும் நாம் தயக்கம் காட்டுகிறோம். முதலில் இதனை சரி செய்யவேண்டும். வெளி மாநிலத்தவர்கள் தமிழ் மொழியினை கற்றுக்கொள்ள நிர்மமாணிக்கவேண்டும். தமிழ் கற்றுகொள்ள வேண்டும் என்பதை திணிக்க வேண்டும்

Horlicks, Boost ஆரம்பித்து நகை அடகு வைக்கும் வரை ஹிந்தி நடிகர்களை தமிழில் குரல் கொடுத்து விளம்பரம் செய்யப்படுகிறது.

பிற மாநிலத்தவர்கள் மீது தமிழ் திணிக்கப்பட வேண்டும் . தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது கற்று கொடுக்கப்படும்

Leave a Reply